எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday 17 October 2021

தீபாவளி கொண்டாடு பாப்பா

காலையில் நீராடி பாப்பா - நீ 

புத்தாடை உடுத்திக்கொள் பாப்பா

கடவுளைக் கும்பிட்ட பின்னிங்கே

கொண்டாட்டம் களைகட்டும் பாப்பா


இனிப்புகள் பகிர்ந்துண்டு பாப்பா - நீ

இனிமையாய் மகிழ்ந்திடு பாப்பா

தீமையது தோற்றதைப் பாப்பா - நாம்

தீபாவளி கொண்டாடுவோம் பாப்பா


நண்பர்கள் உறவினர்க்கு பாப்பா - நீ 

நல்வாழ்த்துச் சொல்லிவிடு பாப்பா

பட்டாசுகள் வெடித்தே பாப்பா - நீயும்

பத்திரமாய்க் கொண்டாடு பாப்பா


பறவைகள் பயப்படாது பாப்பா - இந்தப் 

பூமியில் பட்டாசு வெடித்தால்

விலங்குகட்கும் வேதனை இல்லை -  நீ

வெடிகளைப் பத்திரமாய் வெடித்தால்


ஒருநாள் கொண்டாட்டம் பாப்பா - யார்க்கும்

பெருந்துன்பம் இருப்பதில்லை பாப்பா

அடிப்படை புரிந்தே பாப்பா - நீயும்

அகமகிழ்ந்து கொண்டாடு பாப்பா


- பார்வதேயன்.