எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday 25 December 2013

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட
பகலும் அல்லும் பணிபல செய்திட்ட
காவியத் தலைவன் காசறு கோமான்
கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான்

Thursday 5 December 2013

இராம ராஜ்ஜியமே லட்சியம்

பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும்
பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற
பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து
பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே

Thursday 24 October 2013

தேச குருவுக்கு வணக்கம்!

விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை.

நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கி
நல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்
நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்ட
நேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே


Wednesday 25 September 2013

காவியம் பாடுவோம்

காற்றில் பளபளக்குது காவித் தோரணம்
காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும்
கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை
கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை


Saturday 20 July 2013

அரனருளோடு அரணாவோம்


நாட்டைத் துண்டாடும் நாசகாரர் செயலால்
கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை
நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக்
களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை

Sunday 5 May 2013

ஈழத்துக்கு இரங்கற்பா - இப்போது ஏனப்பா?

ஈழத்துச் சாவுகுறித்து ஈரமிக்க கண்களுடன்
இங்கத்திய கவிவாலி கவிதை புனைந்துள்ளார்
எண்ணாறு மாதங்கள் காத்திருந்து கவிபுனைய
என்னதான் காரணம் என்றேயவர் சொல்லவில்லை

Sunday 20 January 2013

விவேகத்தின் வெள்ளி


தமிழ்தாமரை மின்னிதழில் வெளிவந்த என் கவிதை*

பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட
ஞானத்தின் முழு ஞாயிறே - வேத
ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட
பார்புகழும் எழு ஞாயிறே.