காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும்
கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை
கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை
பாலை நிலத்தார் படையெடுத் திங்கே
பாவங்கள் பலவும் புரிந்திட்ட போதும்
மேலை நாட்டினர் வணிகராய் வந்து
மேதினியில் நமை யாட்கொண்ட போதும்
தொன்மத மழித்துத் தம்மதம் நாட்டிட
தொல்லை பலவும் கொடுத்து வாட்டியே
திசை தொழுவோரும் வசை தொழுவோரும்
திக்குக் கொருவராய் தீமைகள் புரிந்தும்
மனத்திலே ஊன்றிய மாசற்ற முறைமை
மண்ணின் தன்மையாய் மிளிரும் தொன்மை
மாற்றிட வழியின்றி மாய்ந்தே பழித்திடும்
மாற்றாரைத் தொழுதிடும் சிறுமதிக் கூட்டம்
தொன்மதப் பெருமையை மக்கள் உணர்ந்தால்
தொகுத்துப் பிரித்துப் பணப்பை நிரப்பிடும்
முதலற்ற வணிகம் முற்றாய் வீழ்திடும்
முதலச்சம் இதனாலே சனாதனம் பழிப்பர்.
எவ்வழி வரினும் பணமே பெரிதென
எக்காளம் கொட்டி ஏற்றிடும் மூடர்
எதிரிகள் அல்ல திரோகியாம் அறிவீர்
எக்காலமும் அவரை ஏற்பது இகழ்வே
வஞ்சகர் சூதும் துரோகியர் செயல்களும்
பாரத காவியம் செய்தது அறிமுகம்
திராவிடக் கட்சிகள் தொடருது காணீர்
இனியும் வேண்டுமா இவரது தொல்லை
தென்குமரிக் கடலில் அலைகளின் நடுவே
பாறையின் மீதொரு இமயமாய் நின்று
பாரதம் உய்விக்கக் கடுந்தவம் புரிந்த
துறவியின் கனவினை நனவாகப் புரிய
காவிய நாயகன் இராமனுக் காலயம்
காலங்களாய் நமர் மனதின் ஓவியம்
சோம நாதரின் ஆலயம் புதுப்பித்த
வல்லவத் தலைவனின் இளவல் வழியில்
இராம நாதன் பிறந்த மண்ணில்
இரவு பகலாய்க் கடமையே கருத்தாய்
ஆலயம் எழுப்பி வணங்கி மகிழ்வோம்
ஆன்றோர் அருளுடன் வாழ்வில் உயர்வோம்
தெய்வம் இல்லெனக் கூறும் புல்லர்
தெளிவை மறுக்கும் குறை மதியாளர்
தேடித் தேடியே சிறுமை கதைத்து
தேய்ந்து போகும் குறுமதிக் கோட்டியர்
சிறுதனச் செயலால் சினத்தை மூட்டுவர்
சீர்மிகு வாழ்வைக் குலைப்பது குறியாய்
தீவழி யெதுவும் கைகொளத் துணிவர்
சீறினால் சற்றே விலகிக் கொள்வர்
துன்பம் பலவும் தந்திடும் மாற்றார்
தூய்மை கெடுக்கச் செய்யும் சதிகள்
துணிவுடன் எதிர்த்துத் துவம்சம் செய்து
தூமணியாய் நமர் வாழ்ந்திடச் செய்ய
உள்ளம் உவக்கக் கடவுளின் அருளால்
உயர்வைக் காட்டிய உத்தமக் குழுமம்
நாட்டிய நல்வழி நேர்படு பாதையாம்
சத்சங்க வழியில் பயணிக்க வாரீர்.



No comments:
Post a Comment