எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday, 20 January 2013

விவேகத்தின் வெள்ளி


தமிழ்தாமரை மின்னிதழில் வெளிவந்த என் கவிதை*





பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட
ஞானத்தின் முழு ஞாயிறே - வேத
ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட
பார்புகழும் எழு ஞாயிறே.



கடவுளைக் கண்டபெரு ஞானியரின் சீடனாய்
தெளிவு பெற்ற தூமணியே - தேசம்
தெளிவற்ற குட்டையாய் கலங்கிய காலத்தே
கடமைதனை உணர்த்த வந்தாய்


இல்லையெனில் நீயில்லை இழந்தாலோ என்றுமில்லை
அன்னையவள் பெருமை சொன்னாய் - பாரத
அன்னையவள் துயர்துடைக்க ஆன்மபலம் மிக்கசில
இளைஞர்கள் போது மென்றாய்

சீறும் கடல்நீந்தித் தவம்புரிந்த சீலத்திருவுருவே
ஞானத்தின் எழிற் கோலமே - தேசம்
ஞாலத்தில் முந்தியதாய்ப் பீடுகொள்ள வழிசொன்ன
சீராளன் உனைப் பணிவோம்

கடல் கடந்து தொன்மதத்தின் பெருமைகளை
உயிர்ப்புடன் உரைத்திட்ட உத்தமனே - உனக்கு
உயர்வுசெய இளைஞர்கள் பாரதத்தின் எழுச்சிக்குக்
கடமை யாற்றலே வழி!

- பார்வதேயன்.

* இது வெண்பா அல்ல.

No comments:

Post a Comment