களவென்ற கண்ணீரே களவென்று ஐயமாம்
களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லை
அழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலே
அறத்துக்கு இடமில்லை அறி.
பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்து
மனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்ட
கள்மனம் எரித்திட்ட கண்கண்ட தெய்வமே
எரித்தாட் கொண்டாராம் தெளி.
நூறுதொடும் கிழாரும் நாற்றமிகு வன்மத்தில்
உற்றாரிடர் கண்டாங்கே உவந்தே களித்திருக்க
அரையாயுள் தாண்டிய அந்நியரை நோவதேனோ
வன்மம் வயதறியா தறி!
அல்லவை அறுத்து அறத்தினை நாட்டலே
வாழ்வின் கடமையென வழிகாட்டும் வேலோடு
சூரனை வதைத்துச் சிரமுயர்த்தி அடியாரைக்
காக்கின்ற குமரா கேள்!
களவெனும் ஒழுக்கமும் கைக்கொளா ஒருவனில்
களங்கத்தைக் கற்பித்த கலிமிக்க மனத்திற்கு
தக்கதோர் பாடத்தைத் தெளிவாகப் புகட்டிடுவாய்
சிரமுந்தன் திருவடியில் சரண்!
No comments:
Post a Comment