எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday, 26 January 2011

செவி கொடு பராசக்தி!

காணி நிலமும் கவின்மிகு வீடும்
காற்றுதரும் மரமும் கண்குளிர் பசுமையும்
காசும் பணமும் குன்றாச் செல்வமும்
காண்பதற் கெழிலான கட்டழகு மனையாளும்
காதலும் வேண்டுமுன் பராசக்தி உன்னிடம்


தொன்மை மிக்க இம்மண்ணின் நெறிகளும்
தேசம் சிறக்க விழையும் தலைமையும்
காசுக்கு வீங்காத பொன்மனத் தொண்டரும்
கண்ணியம் துறக்காத அதிகார வர்க்கமும்
சீர்மிக்க சிந்தையுடை மக்களும் கேட்பேன்! 

மனிதம் மதிக்கும் மாண்புடைத் தலைவர்
மனசாட்சி கேட்டுச் செயலாற்றும் பெரியோர்
மானம் நிஜத்திலும் காக்கும் மறவோர்
மாதவம் குன்றாத அறவோர் தம்மொடு
தூய்மை கெடாத ஐம்பூதம் கேட்பேன்!

அரிய பெருமைகள் எமர்க்குக் கிட்டிட
அறிவிற்ச் சிறந்தோர் நல்வழி காட்டிட
ஆன்றவிந் தடங்கிய முதியோர் மதித்து
ஆளாகும் பிள்ளைகள் வளமுடன் வாழ
உலகைப் படைத்த உன்னருள் கேட்பேன்!

4 comments:

  1. அருமையாக இருக்கிறது....

    ReplyDelete
  2. தமிழ் தவழுகிறது... இனி மேலும் ஓடட்டும்.நன்று

    ReplyDelete
  3. மிக்க நன்றி புலியாரே!!

    ReplyDelete