மருள் நீக்கி அருள்பெருக்கும் விஷயங்களில் சத்தற்றதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் தர்க்க ரீதியாக நிராகரித்துள்ளனர். வன்முறையின் மூலம் எதிர்ப்பை அன்றிலிருந்தே சமாளித்துள்ளனர் மதம் பரப்ப வந்தேறியவர்கள்.
துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய ஏசு மத நிராகரணம் என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது.
காலச்சூழலில் சிக்குண்டு சிதறியவை போக தப்பிப் பிழைத்து எஞ்சியவை கீழே இருக்கும் மூன்று பாடல்கள்.
அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருக மாதி
யிறையவ னென்றா யோரீ யீன்றிட மலமீ தூருஞ்
சிறுபுழு விரையு றாதென் செய்குவை யதனை நோக்க
வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய்.
வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி
நேயமற் றெவர்கூற் றாய நிகழவதெ னுலகத் தந்நாட்
டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி
னாயகோ வாதி மாந்தர்க் கடங்கிய விதமென் கொல்லோ.
சொல்லின னவர்க்கச் சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே
கொல்லமற் றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி
நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி
யல்லல்செய் திடலாற் றீயோ யறைந்தசொற் பழுதே யாகும்.
இது
சதுரகராதி இயற்றிய வீரமாமுனிவரென்னும் கிருஸ்துவரைக், கவிச்
சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித்து எழுதியதாமெனக் காண்க.
ஆனால் அப்பாதிரி கோபங்கொண்டு வஞ்சனையாக அந்நூலை எரித்துவிட்டமையால் நமக்கு
முழு நூல் கிடைக்கவில்லை.
If you can post the meaning of those songs that would still be better
ReplyDelete