எச்சரிக்கை
Sunday, 16 September 2012
போடோ செய்த பாவம் என்ன?
பக்கம் பக்கமாய் கொத்துக் கொத்தாய்
மாநிலம் பரவிய குண்டுகள் அனைத்தும்
புல்லர் புனிதப் போர்வை போர்த்துப்
பயத்தின் பாற்படு செய்கை பாரீர்.
குடிசை வசதியின் சின்னம் என்னும்
குறுநிலம் கிழக்கு வங்கம் பாரீர்
பெயரோ பங்களா தேசம் என்பார்
பெற்றதோ வறுமை மட்டுமே பார்.
உற்றார் என்பார் உதவிக்கு இல்லை
உறவின் முறைகள் முறைத்தே நின்றன
தன்னிறு புறத்தே தறுதலை தேசசங்கள்
தரமிக்க பாரதத்தின் அமைதிக்கு ஒச்சங்கள்.
சோற்றுக்கும் கதியற்ற கீழ்வங்க தேசமது
சோடையாய் நின்றது ஆதாரப் பிடியின்றி
உறுத்தாய் மதம்பேசும் குடாநாட்டு மாந்தரோ
உறுத்தல் ஏதுமின்றி வறுமையை வழுத்தினர்
சோர்வின் உருவான கீழ்வங்க மக்களோ
சோகம் போக்கிச் சுகமாய் வாழ்ந்திட
எல்லை கடந்து அசாமில் புகுந்தினி
எல்லாம் நன்மை என்றே எண்ணினர்
காலங் காலமாய் ஆங்கே வாழும்
காலைக் கதிரோன் வழிபடு மக்கள்
காலைச் சுற்றிய பாம்பாய்ச் சீறியே
காலனின் கணக்கில் சேர்த்தனர் வந்தோர்
நம்மால் நமக்காய் அமர்த்தப் பெற்ற
நம்முடைய அரசோ நம்மைத் தள்ளி
எண்ணில் அதிக ஓட்டினை எண்ணி
எங்கோ போவென நமரை தள்ளிடும்
எம்வழி எமக்கெனும் மண்ணின் மைந்தர்
எமனின் தூதராய்த் தூற்றப் படுவார்
ஏற்க மறுப்போர் விரோதிகள் என்றே
ஏகாந்தச் சிறையில் தள்ளப் படுவர்
ஏனிது கொடுமை என்றே நோக்கின்
ஏடுகள் தொடங்கி ஊடகம் அடக்கி
எண்ணம் தவறாய் எம்மில் அழுத்தி
எதுவும் செய்யும் எத்தம் தெரியும்
எத்தனை துயரம் எத்தனை கோரம்
எங்கும் எதிலும் அநீதி நாட்டும்
மனம்கவர் வழியில் பாரதம் எட்டும்
பணம்கவர் முகமை நடாத்திக் காட்டும்
மிலேச்ச மாதுவின் காலணி துடைக்கும்
மிகப்பெரும் படிப்புப் படித்த மாந்தர்
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலம்
நம்மவர் அந்நியர்க்கு அடிமை மாந்தரே...
Labels:
அரசியல்,
ஒற்றுமை,
செழிப்பு,
தீவிரவாதம்,
பொருளாதாரம்,
வளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment