எச்சரிக்கை

எச்சரிக்கை

Sunday, 19 August 2012

ஈழோத்ஸவ கான மஞ்சரி

தீன கருணாகரனே ராஜபக்‌ஷே லங்கைத் தலைவனே!
ஈழப் போரது முடிந்தபோதும்,
ஈழம் தனியே இல்லை எனினும்
ஈழம்காட்டிப் பிழைக்கும் நிலை எமக்கே
லங்கைத் தலைவனே ஐயா.. லங்கைத் தலைவனே!!
(தீன)



லட்சம் மக்கள் மாண்ட நேரம்
லட்சகணக்கில் தவித்த கோரம்
லட்சம் கோடி பணத்தை எண்ணினோமே
லட்சியம் செய்யலே ஈழத்தை
லட்சியம் செய்யலே
(தீன)

கூட்டம் எல்லாம் போடுவதாலே
கூவிக் கூவிப் பேசுவதாலே
சிறு துன்பமேனும் குறைந்து போயிடுமோ
சிரிப்புத் தாளலே எமக்கே
சிரிப்புத் தாளலே....

ஜெய் முள்ளிவாய்கால் ஸம்ஹார மூர்த்தி ராஜபக்‌ஷே மகராஜ் கீ.. ஜெய்!!!

ஆடி 28ஆம் தேதி டெஸோ எனப்படும் ஈழோத்ஸவத்திலே (கலைஞர் கருணாநிதி என்று போற்றப்படும்) பகுத்தறிவுஸ்ரீ தக்ஷிணமூர்த்தி பாகவதரும் அவருடைய குமாரர் (மு.க.ஸ்டாலின் என்றறியபடும்) ஸ்ரீஅய்யாஸ்வாமி பாகவதரும் தம் குழுவினருடன் நடத்திய கச்சேரிக்குப் பொருத்தமான பாடல்மேலே இருக்கிறது.

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே.. என்ற MK தியாகராஜ பாகவதர் பாட்டின் மெட்டில் பாடுவோர் பகுத்தறிவு பெற்று உய்வார்கள் என்பது பகுத்தறிவைதீகம்...
(பட உபயம்: Facebook)

1 comment:

  1. http://www.dinamani.com/edition/Blogstory.aspx?&SectionName=BlogNews&artid=647173&SectionID=184&MainSectionID=184&SEO=seo&Title=

    ReplyDelete