குருவின் வாக்கே வளமை கூட்டிடும்
குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால்
குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால்
குருவை வணங்குதல் தலை.
பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்
பாரதம் போற்றிடும் ஞானத்திரு வடிவம்
மறைபொருள் உணர்ந்த மனமோ ஸ்படிகம்
மந்திரம் நீர்வாழும் தலம்.
அன்பரைக் காத்தருளும் ஆன்மநலக் கேணி
மங்கலங்கள் எமக்கருளும் மாதவப்பெரு ஞானி
அத்வைத அறிவூட்டி மாந்தரையே பேணி
மங்கலங்கள் எமக்கருளும் மாதவப்பெரு ஞானி
அத்வைத அறிவூட்டி மாந்தரையே பேணி
மறைவழி உயர்த்தும் ஏணி.
நின்வழி யதுவோ சாரதை வகுத்தது
நின்பணி யாவும் அவளைச் சார்ந்தது
நினதருள் நிழலில் தர்மம் செழிக்குது
நின்கருணை அன்பின் மழை.
இம்மையும் சிறக்க வழிசெயும் சான்றோர்!
இன்பம் எதுவென எமக்கும் உணர்த்திடும்
இவர்பாதம் பணிதல் வரம்.
தவத்தாலே தானுணர்ந்த பரப்பிரம்ம ஞானத்தை
எம்முள்ளே யாமுணர ஒளியூட்ட விழைகின்ற
தவமுனிகள் வழியொற்றி தர்மத்தை உரைக்கின்ற
எம்மான் திருவடி சரணம்!
- பார்வதேயன்.
- பார்வதேயன்.
No comments:
Post a Comment