(ஆம் ஆத்மி கட்சி பல தில்லுமுல்லுகளினூடே தில்லியில் டிசம்பர் 2013 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து)
கூட்டெனச் சிலகூகைகள் மறைந்துகூவும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. மாநிலத்து தலைவரெலாம் மாய்ந்து மறுத்ததாலேயே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. உறவு என்பதில்லையென்று ராஜநாதர் சொன்னதும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. தனித்துநின்று தமிழகத்தில் குறைவாய் வெல்லும்போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. தொன்மதத் தெழுச்சிவேண்டி மாந்தர்கூடி நிற்பதால் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. (2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்த போது எழுதியது)
வாஜ்பாய் காலத்து பாஜக மோடி காலத்தில் இல்லை. ஆகவே கூட்டணி கிடையாது என்று கூறிய கருணாநிதி, அதே நாளில் பாஜக அழைத்தால் சேருவோம் என்றும் மோடி மிக நல்லவர் என்றும் கூறிய போது எழுதியது. 2013 டிசம்பர். மாமலையை மடுவாக்கி மடுவினையே மேடுறுத்தி மாபணிகள் செய்திடுவான் மாதவனைப் போற்றுவதும் மாநிலத்தில் நம்பணியாம் மாண்பைக் காப்பதுநில மாதாவைக் காப்பதுவாம் மாந்தரே தெளிந்திடுவீர்
மாதவனின் பாதையிலே மாவிடர்கள் புதிதுமல்ல மாமனிதன் கேசவனின் மாபடையோ பேடியில்லை மாநிலத்தில் சநாதனத்தை மேன்மையுறச் செய்வதற்கு மாநிலத்தின் தாயவளே மனமுவந்து அருள்செய்வாள் (ஹிந்துக்களை ஏகடியம் செய்து வீரபாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சும் அதன் பின் நடந்த கொடும் அரசியல் வித்தைகளைப் பார்த்து வருத்தத்தில் எழுதியது)
(தன் ஓவியத்துக்கு வாங்காத காப்புரிமையைக் கொண்டாடிவந்த ஞாநி, எங்கே காட்டு காப்புரிமையை என்று கேட்டதும் தந்தேன் ஓவியத்தை நாட்டுக்கு என்று பின்வாங்கி அடித்த குட்டிக்கரணம் கண்டு சிரித்துக் கொண்டே 11/01/2014ல் எழுதியது)
(காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தபின் குலாம் நபி ஆசாத்துடன் சந்திப்பும் நீண்டகாலத்துக் கூட்டணி என்ற அவரது கருத்தும் அதற்கு கருணாநிதி மறுப்பேதும் தெரிவிக்காததும் கண்டு 09/01/2014ல் எழுதியது.) தைதை எனக்குதித்தாலும் தையிலே புத்தாண்டென்று கைபிடித்த பெண்களும் கைகோர்க்கார் இவரொடு வையகத்து வழக்கப்படி வைத்திடும் பொங்கலிலும் கைவிரலில் தொட்டுத்தரும் கையறு நிலையவர்க்கு